
கற்ற பாடசாலையில் மண்ணை முத்தமிட்ட கோனேஸ்வரா மாணவர்கள்
தி/ இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பாடசாலை வளாகத்திலிருந்து 6ஆம் தரத்திற்கு சித்தி அடைந்து உயர் கல்லூரி வளாகத்தை நோக்கி பயணிக்கும் முன் கற்ற பாடசாலையின் மண்ணை முத்தமிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தாம் 5 ஆண்டு கற்ற ஆரம்ப பிரிவு மாணவர்கள் பாடசாலை வளாகத்தைத் தொழுது, மண்ணை முத்தமிட்டு, அதிபர், ஆசிரியர்களுக்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லும் காட்சி பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு ஆரம்பப் பிரிவு அதிபர் திரு. கணேசலிங்கம் மற்றும் ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டல் போற்றத்தக்க விடயமாகும்.