யாழ். நல்லூர் பகுதியில் பேருந்தில் தவறி விழுந்து இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு..!

யாழ். நல்லூர் பகுதியில் பேருந்தில் தவறி விழுந்து இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு..!

யாழில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று (23.2.2024) காலை இடம்பெற்றது.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பருத்தித்துறையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்தில் சென்ற குறித்த இளைஞன் கீழே விழுந்த நிலையில் பேருந்தின் சில்லுக்குள் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பணியாற்றும் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.