தமிழ் மொழிப் பரீட்சை வினாத்தாளில் காணப்பட்ட விமர்சனத்திற்குள்ளான கேள்வி!
நாடளாவிய ரீதியில் தற்போது பாடசாலைகளில் இவ்வாண்டுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை நடைப்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு இடம்பெற்ற தமிழ் மொழிப் பரீட்சையில் பகுதி 1 வினாத்தாளில் காணப்பட்ட கேள்வி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் மொழி வினாத்தாளில் “ஒரு நாடு இரு தேசம் ” எனத் தமிழர்கள் முழங்கினர். என்று தொடரப்பட்டுள்ள வினா மேற்படி மாணவர் சமூகத்தவரிடையே விமர்சனக்குள்ளாகியுள்ளது.
அதாவது ஒரு நாடு இரு தேசம் எனத் தமிழர்கள் முழங்கினர் என்ற வசனம் இலங்கையில் யுத்தகாலத்தில் நிலவிய நிலைமைகளைப் புலப்படுத்துவதாக காணப்படுகின்றாக தெரிவிக்கப்படுகின்றது.