சீனாவுடன் கைகோர்க்கும் இலங்கை!

சீனாவுடன் கைகோர்க்கும் இலங்கை!

ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நிறுவனத்திற்கும், இலங்கையின் முதலீட்டுச் சபைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், எரிபொருள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

சீனாவுடன் கைகோர்க்கும் இலங்கை! | Sri Lanka Joining Hands With China Fuelஅத்துடன் இந்த ஒப்பந்தத்தின் கீழ், மொத்த உற்பத்தியில் 20 சதவீதத்தைகொள்வனவு செய்ய இலங்கைக்கு உரிமை உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் கட்டத்தின் போது சினோபெக் நிறுவனம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைக் கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.