சிறுநீர் கழித்த பொலிஸ் பரிசோதகர் மீது கொலை வெறித்தாக்குதல்!

சிறுநீர் கழித்த பொலிஸ் பரிசோதகர் மீது கொலை வெறித்தாக்குதல்!

கொழும்பில் சிறுநீர் கழித்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு - பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகளுக்கான சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள மரமொன்றின் கீழ் பொலிஸ் பரிசோதகர் சிறுநீர் கழித்தபோதே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

குறித்த பொலிஸ் பரிசோதகர் பம்பலப்பிட்டி பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். அவரது முறைப்பாட்டில் சுமார் ஆறு பேர் கொண்ட குழுவொன்று வந்து தன்னை சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தாக்குதல் நடத்திய குழுவில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் இருந்ததார் எனக் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் பரிசோதகர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.