ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (11) இடம்பெறவுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக இது இடம்பெறவுள்ளது.

இப்போட்டி பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட அதே இலங்கை அணியே இன்றைய போட்டியிலும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அந்த வெற்றியாலும், பெத்தும் நிஸ்ஸங்கவின் இரட்டைச் சதத்தின் மூலமும் இன்றைய போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிபார்த்துள்ளனர்.