உக்ரைன் கண்காட்சியில் ராணுவ விமானம் மக்கள் மீது விழுந்து 85 பேர் பலியான நாள்: 27-7-2002

உக்ரைன் கண்காட்சியில் ராணுவ விமானம் மக்கள் மீது விழுந்து 85 பேர் பலியான நாள்: 27-7-2002

உக்ரைன் ராணுவத்தின் 60-ம் ஆண்டை முன்னிட்டு விமானப்படை கண்காட்சி நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். வானில் சாகசம் காட்டிய விமானத்தில் ஒன்று திடீரென தரையை நோக்கி சீறிப்பாய்ந்து பொதுமக்கள் மீது மோதியது. இதில் 77 பொதுமக்கள் பலியானார்கள். 543 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிலர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தனர். இதனால் சாவு

 

உக்ரைன் ராணுவத்தின் 60-ம் ஆண்டை முன்னிட்டு விமானப்படை கண்காட்சி நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வானில் சாகசம் காட்டிய விமானத்தில் ஒன்று திடீரென தரையை நோக்கி சீறிப்பாய்ந்து பொதுமக்கள் மீது மோதியது. இதில் 77 பொதுமக்கள் பலியானார்கள். 543 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிலர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 85-ஆக உயர்ந்தது. உலகிலேயே விமானப்படை கண்காட்சியில் நடந்த மோசமான விபத்து இதுவாகும்.

 


இதே நாளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்:-

*  1921 - பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொரோண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.

* 1941 - ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ- சீனாவைக் கைப்பற்றினர்.

* 1953- கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.

* 1955 - ஆஸ்திரியாவில் மே 9, 1945 முதல் நிலை கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.