தென்மராட்சியில் வீதியில் பயணித்த பெண்ணின் சங்கிலி அறுப்பு

தென்மராட்சியில் வீதியில் பயணித்த பெண்ணின் சங்கிலி அறுப்பு

தென்மராட்சி உசன் பகுதியில் வீதியில் பயணித்த பெண்ணின் தங்கச் சங்கிலி அறுத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் (26) காலை நடைபெற்றுள்ளது.

உசன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகாமையில் பெண் ஒருவர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர் கொண்ட குழுவால் பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலி அறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சங்கிலியை பறி கொடுத்த பெண் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்