சனத் நிஷாந்தவின் மனைவிக்கு எம்.பி் பதவி!

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு எம்.பி் பதவி!

விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் மொட்டு கட்சியினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஏற்கனவே கலந்துரையாடலை நடத்தியதாக கூறப்படுகின்றது.

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு எம்.பி் பதவி! | Sanath Nishantha S Wife Mp Position

இந்நிலையில் அது குறித்த பிரேரணை கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுவில் இன்றும் நாளையும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்த பிரேரணைக்கு கட்சியின் உயர்மட்ட தலைமையின் ஆசியும் கிடைத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.