கொரோனா வைரஸ் அச்சதிற்கு மத்தியில் எல்லை நகரத்தை மூடியது வட கொரியா

கொரோனா வைரஸ் அச்சதிற்கு மத்தியில் எல்லை நகரத்தை மூடியது வட கொரியா

கடந்த வாரம் வடகொரியாவில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அச்சத்தில் தென் கொரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள கேசோங் நகரத்தை முடக்கியுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

அத்தோடு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து ஜனாதிபதி கிம் ஜோங் உன் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் உயரதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும் குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தபட்டால், வட கொரியாவில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நோயாளியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது