யாழ்ப்பாணத்தில் பொலிஸார் விதித்துள்ள தடை : மீறுவோருக்கு தண்டனை..!

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் விதித்துள்ள தடை : மீறுவோருக்கு தண்டனை..!

யாழ்ப்பாணத்தில் பறக்கும் பட்டத்தின் கயிற்றில் தொங்கிய நிலையில் செல்பி எடுக்க பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

பட்டத்தின் உதவியுடன் இளைஞன் ஒருவர் வானில் பறக்க முற்பட்ட சம்பவத்தையடுத்து பொலிஸார் நேற்று முதல் தடை விதித்துள்ளனர். 

இவ்வாறான சம்பவங்களால் ஏற்படக்கூடிய ஆபத்தான சூழ்நிலைகளை குறைக்கும் வகையில் பொலிஸார் இந்தத் தடையை விதித்துள்ளனர்.

தொண்டமனாறு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் பட்டம் விட பயன்படுத்தும் கயிற்றில் தொங்கி வானத்தில் 80 அடி உயரம் வரை சென்ற காணொளி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் விதித்துள்ள தடை : மீறுவோருக்கு தண்டனை | Jaffna Kite Festival 2024 Police New Rules

இது குறித்து எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து பொலிஸார் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

தடையை மீறி பட்டத்தின் கயிற்றில் தொங்கி வானில் பறக்க முற்படும் இளைஞர்கள் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.