திருகோணமலையில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய நபர் கைது..!

திருகோணமலையில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய நபர் கைது..!

திருகோணமலை நாமல்வத்த பகுதியில் 13 வயது சிறுமியை தாகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை இன்று (19.01.2024) மொரவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது சிறுமியின் உறவினரான  47 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய நபர் கைது | Man Arrested For Molesting 13 Year Old Girl

மேலும், சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.