பெண்ணிடம் கொள்ளையிட்ட நபரை அடித்துக் கொன்ற ஊர் மக்கள்!

பெண்ணிடம் கொள்ளையிட்ட நபரை அடித்துக் கொன்ற ஊர் மக்கள்!

கொழும்பு பாணந்துறை பிரதேசத்தில் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய நபர் ஒருவரை சிலர் மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.

தாக்கப்பட்ட நபரை காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பாணந்துறை பிங்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பெண்ணிடம் கொள்ளையிட்ட நபரை அடித்துக் கொன்ற ஊர் மக்கள்! | Beat The Man Who Robbed The Woman

நேற்று முன்தினம் மதியம் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

இவரை சிலர் மடக்கி பிடித்து பாணந்துறை தெற்கு காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் சற்று சிரமப்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணிடம் கொள்ளையிட்ட நபரை அடித்துக் கொன்ற ஊர் மக்கள்! | Beat The Man Who Robbed The Woman

சடலம் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.