
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய புதிய நிர்வாகம் தெரிவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய புதிய நிர்வாகம் தெரிவாகி பொறுப்பேற்றுள்ளது.
குறித்த நிர்வாகத் தெரிவு இன்றையதினம் (1.1.2024) இடம்பெற்றுள்ளது.
நிர்வாக உறுப்பினர்கள்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக கு.துவாரகன் முகாமைத்துவ பீடத்திலிருந்தும், செயலாளராக சோ.சிந்துஜன் கலைப் பீடத்திலிருந்தும், பொருளாளராக கிந்துஜன் விஞ்ஞான பீடத்திலிருந்தும் ஏனைய உறுப்பினர்கள் ஒவ்வொரு பீடத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த முறை அ.விஜயகுமார் தலைமையிலான நிர்வாக உறுப்பினர்கள் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.