கடைசி வரை நிறைவேறாமல் போன கேப்டன் விஜயகாந்தின் ஆசை.

கடைசி வரை நிறைவேறாமல் போன கேப்டன் விஜயகாந்தின் ஆசை.

கேப்டனும், நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் இன்று காலமானார். அவரது நிறைவேறாத ஆசை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் இன்று காலை காலமானார்.

விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடைசி வரை நிறைவேறாமல் போன கேப்டன் விஜயகாந்தின் ஆசை | Vijayakanth Unfulfilled Wish

இந்நிலையில், விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணி அளவில் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

தே.மு.தி.க தலைவரும், நடிகருமான விஜயகாந்த், பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் சுமார் 20,000 சதுர அடியில்  வீடு ஒன்றை கட்டி வந்தார். அதில் குடியேற விஜயகாந்த் ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் வீட்டின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் வீடு காட்டும் பணி தொடங்கியது.

கடைசி வரை நிறைவேறாமல் போன கேப்டன் விஜயகாந்தின் ஆசை | Vijayakanth Unfulfilled Wish

90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் பால் காய்ச்சப்பட்டதாகவும்,  இதற்கு விஜயகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

சுமார் 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டில் விஜயகாந்த் வசிக்க வேண்டும் என்ற அந்த ஆசை நிறைவேறாமலே போனதாக கூறப்படுகிறது.