இலங்கையில் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல்!

இலங்கையில் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல்!

இலங்கையில் மாணவர்கள் தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினால் இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல்! | Huge Threat To Lives Of School Students Sri Lankaசட்டத்திற்கு புறம்பாக பல்வேறு முறைகளின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தரமற்ற பாடசாலை உபகரணங்கள் இன்று சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்களில் பூசப்பட்டுள்ள பூச்சு, வண்ண பென்சில் குச்சிகள் தரமானதாக இல்லை என்றும், இதனால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல்! | Huge Threat To Lives Of School Students Sri Lanka

மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்தும் போது, ​​ஈயம் போன்ற கன உலோகங்கள் வாய்வழியாக உட்கொள்வதன் மூலம் உடலில் சேர வாய்ப்புள்ளது.

ஆனால் சர்வதேச தரத்தின்படி, குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 19 கன உலோகங்களில் இருந்து பாதுகாப்பை வழங்கும் என EN71-3 சான்றிதழ் அச்சிடப்பட்டிருக்கும்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல்! | Huge Threat To Lives Of School Students Sri Lanka

இதற்கிடையில், மாணவர்கள் உணவின் மூலம் நேரடியாக உடலுடன் தொடர்பு கொள்ளும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் மதிய உணவுப் பெட்டிகள் போன்ற பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.

சந்தையில் இருந்து கொள்வனவு செய்யும் போது உபகரணங்களில் அடிப்பகுதியில் BPA யில் 5 என்ற எண் எழுதப்பட்டிருந்தால், அவை பயன்படுத்த ஏற்றது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.