தொடரும் கன மழை : வவுனியா வடக்கில் பொது மக்கள் பாதிப்பு!

தொடரும் கன மழை : வவுனியா வடக்கில் பொது மக்கள் பாதிப்பு!

தொடரும் மழை காரணமாக வவுனியா வடக்கில் பொது மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகத் தொடரும் கன மழை காரணமாக வவுனியா வடக்கில் 22 குடும்பங்களை சேர்ந்த 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (16) தெரிவித்துள்ளது.

அதன்படி, மாறா இலுப்பை பகுதியில் 05 குடும்பங்களை சேர்ந்த 22 நபர்களும், சின்னடம்பன் பகுதியில் 09 குடும்பங்களை சேர்ந்த 35பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த இவர்கள் தற்போது இரு பொது மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் கன மழை : வவுனியா வடக்கில் பொது மக்கள் பாதிப்பு! | 22 Families Were Affected In Vavuniya Due To Rainஇதேவேளை நைனாமடு பகுதியில் 02 குடும்பங்களை சேர்ந்த 06 நபர்களும், நெடுங்கேணியில் 06 குடும்பங்களை சேர்ந்த 21 அங்கத்தவர்களும் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.