கிழக்குக் கடற்பரப்பில் காணாமல் போயுள்ள சிறுவன்; பொலிஸார் தேடும் பணியில்!

கிழக்குக் கடற்பரப்பில் காணாமல் போயுள்ள சிறுவன்; பொலிஸார் தேடும் பணியில்!

மட்டக்களப்பு - பாணம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடிய சிறுவன் கடலில் காணாமல்போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதலில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன குறித்த சிறுவன் கம்பஹா - கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவராவார்.

குறித்த சிறுவன் கணேமுல்ல பிரதேசத்திலுள்ள விகாரையொன்றின் சில தேரர்கள் மற்றும் மேலும் சில நபர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே காணாமல் போயுள்ளார்.

கிழக்குக் கடற்பரப்பில் காணாமல் போயுள்ள சிறுவன்; பொலிஸார் தேடும் பணியில்! | Police Searching For Missing Boy In Panama Seaகாணாமல்போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸ் கடல் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாணம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.