இலங்கையில் ஆபத்தான 88 பேரை தேடும் இன்டர்போல்.

இலங்கையில் ஆபத்தான 88 பேரை தேடும் இன்டர்போல்.

இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற 88 குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய சர்வதேச பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதற்காக சர்வதேச பொலிஸாரால் நீல அறிவித்தல் விடுத்துள்ளதாக இலங்கை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆபத்தான 88 பேரை தேடும் இன்டர்போல் | Interpol Is Looking Dangerous People In Sri Lankaஇது தவிர இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற 41 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சிவப்பு அறிவித்தல் மூலம் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேர் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் இலங்கையின் சர்வதேச பொலிஸஸ் பிரவு தெரிவித்துள்ளது.