இலங்கை மாணவியின் அசத்தல் சாதனை!

இலங்கை மாணவியின் அசத்தல் சாதனை!

மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச ABACUS L1B கணிதப் போட்டியில், 13 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,500 போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்று, இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார் மெதவச்சி அல்-மதீனா உயர்தரப் பாடசாலையின் 7ஆம் தர மாணவி சும்ரி பாத்திமா சுதா.

சர்வதேச அபாகஸ் போட்டிக்குத் தெரிவான அவர், பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்த மகத்தான சாதனையைப் பாராட்டி, நேற்று (11) மெதவச்சி அல்-மதீனா உயர்தரப் பாடசாலையில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அவருக்கு சிறப்பான கௌரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

🌹 சும்ரி பாத்திமா சுதாவிற்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! மேலும் பல சர்வதேச வெற்றிகளைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். 🤲✨

May be an image of text

May be an image of ‎dais and ‎text that says "‎ง A/ AL-MADEENA MAHA VIDYALAYA MEDAWACHCHHA INTERN 女 ABACUS L1B CHAMPION 國 M.S.F.SUDHA M.S.F. SUDHA GRADE - -07 واصطر‎"‎‎