இதுதான் இந்தியா: அமெரிக்க பெண் சொன்ன வார்த்தை... ஒரே போஸ்ட்ல மொத்த சீனையும் மாத்திட்டீங்களேம்மா

இதுதான் இந்தியா: அமெரிக்க பெண் சொன்ன வார்த்தை... ஒரே போஸ்ட்ல மொத்த சீனையும் மாத்திட்டீங்களேம்மா

இந்தியா வந்த அமெரிக்க பெண் ஒருவர், இந்தியாவிடம் அமெரிக்கா நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்தியா வந்த லீஸ் என்ற அமெரிக்க பெண்,  மும்பை மெட்ரோ ரயிலை பார்த்து வியந்துள்ளார். இந்தியாவிடம்  இருந்து அமெரிக்கா கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "நான் மும்பையில் முதன்முறையாக மெட்ரோவில் பயணிக்கிறேன். ஒரு டிக்கெட் வெறும் 20 ரூபாய்தான். ஸ்டேஷன் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. இங்குள்ள பாதுகாப்பு கதவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, செம சேஃப்” என்று பாராட்டியுள்ளார்.

 

ஏசி மெகா கூலிங்

"இதோட ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் என்னன்னா.. இது அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி சப்வே ரயில்களை விட பல மடங்கு சுத்தமாக இருக்கிறது. மும்பையில் செம வெயில் அடிக்குது, ஆனா ட்ரெயினுக்குள்ள ஏசி செம சில்லுனு இருக்கு” என்று பாராட்டியுள்ளார்.

பெண்கள் கம்பார்ட்மென்ட் - அமெரிக்காவுக்கு அட்வைஸ்

மெட்ரோவில் பெண்களுக்கென இருக்கும் பிரத்யேகப் பெட்டியைப் பார்த்த லீஸ், "இங்கு பெண்களுக்காகத் தனி கம்பார்ட்மென்ட் இருக்கிறது. இதை நான் வேறு எந்த நாட்டிலும் பார்த்ததில்லை. மும்பை மெட்ரோ உண்மையிலேயே எக்ஸலன்ட். அமெரிக்கா இதையெல்லாம் இந்தியாவைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று அட்வைஸ் செய்துள்ளார்.

கமெண்ட்ஸ்

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்திய நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களைக் கமெண்ட் பாக்ஸில் கொட்டி வருகின்றனர். பயனர் ஒருவர், 
"அமெரிக்கா இந்தியாகிட்ட இருந்து கத்துக்கணுமா? ரோல்ஸ் ரிவர்ஸ் (Rolls Reverse) மூவ்மென்ட்.. ஒரே போஸ்ட்ல மொத்த சீனையும் மாத்திட்டீங்களேம்மா” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் "நம்ம ஊரோட நல்ல விஷயங்கள் எப்பவுமே ஆன்லைன்ல பெருசா வைரல் ஆகாது. பங்களாதேஷ் ரயில்வேயில் மக்கள் கூரை மேல போற வீடியோவை எடுத்து இதுதான் இந்தியானு போட்டு வைரல் பண்ணுவாங்க. ஆனா, இந்த மாதிரி உண்மையான மாஸ் உள்கட்டமைப்பு வீடியோக்கள் வெளிய வர்றது சந்தோஷம்” என்று குறிப்பிட்டுள்ளார்.