விடுமுறையில் வீடு திரும்பிய இராணுவ சிப்பாய் பரிதாபமாக பலி

விடுமுறையில் வீடு திரும்பிய இராணுவ சிப்பாய் பரிதாபமாக பலி

முல்லைத்தீவு இதிகொல்லாகம வாவியில் மீன்பிடிக்கச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றி வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்கிரியாகம மேல் உல்பொத்த பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய விக்ரமகே சமன் குமார ஜயவீர என்ற இராணுவ சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விடுமுறையில் வீடு திரும்பிய இராணுவ சிப்பாய் பரிதாபமாக பலி | Army Soldier Returned Home On Leave Tragic Death

உயிரிழந்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீடு திரும்பி இதிகொல்லாகம வாவிக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை எனவும் அவரது சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் கூறியுள்ளனர்.