யாழில் கரையொதுங்கிய ஆளில்லா படகு.

யாழில் கரையொதுங்கிய ஆளில்லா படகு.

யாழ் கடற்பரப்பில் ஆளில்லா படகு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த படகானது, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பொற்பதி பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

அந்த படகு கரையொதுங்குவதை கண்ட பிரதேச கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்து படகை கரையேற்றியுள்ளனர்.

இந்நிலையில், கரையொதுங்கிய படகு இலங்கை கடற்றொழிலாளர்கள் பயன்படுத்துவது இல்லை என்றும் இது இந்திய கடற்றொழிலாளர்களின் படகாக இருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

யாழில் கரையொதுங்கிய ஆளில்லா படகு(படங்கள்) | Unmanned Boat Has Washed Ashore In Jaffna

எவ்வாறாயினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.