மீசைக்கு பிரபலமான நடிகர் மரணம்; சோகத்தில் தமிழ் திரையுலகம்!

மீசைக்கு பிரபலமான நடிகர் மரணம்; சோகத்தில் தமிழ் திரையுலகம்!

சிட்டிசன், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (09) காலை காலமானா தாக தெரிவிக்கப்படும் நிலையில், சினிமா துறையினல் இரங்கலகளை கூறிவருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் மதுரை மோகன்.

மீசைக்கு பிரபலமான நடிகர் மரணம்; சோகத்தில் தமிழ் திரையுலகம்! | Madurai Mohan Passed Awayஇவரது மீசை தான் அவரது அடையாளமாகவே பல படங்களில் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. அவரது மீசை ரொம்பவே பிடிக்கும் என சிம்பு சொல்லியிருக்கிறார் என மதுரை மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதோடு நடிகர் அஜித் குமார் மட்டும் தனது ரசிகர் மன்றங்களை கலைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவருக்கு இருக்கும் ரசிகர் படை மிகப்பெரியளவில் இருந்திருக்கும் என்றும் சிட்டிசன் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்த அனுபவங்களையும் ஷேர் செய்திருந்தார்.

மீசைக்கு பிரபலமான நடிகர் மரணம்; சோகத்தில் தமிழ் திரையுலகம்! | Madurai Mohan Passed Away

முண்டாசுப்பட்டி படத்தில் மதுரை மோகனுக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்த நிலையில், தொடர்ந்து பல பட வாய்ப்புகள் மீண்டும் அவருக்கு கிடைக்கத் தொடங்கின.

இந்நிலையில், உயிரிழந்த மதுரை மோகனுக்கு நடிகர் காளி வெங்கட் தனது அஞ்சலியை செலுத்தி உள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்,

”ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை 'முண்டாசுப்பட்டி' படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும் என பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.