வெள்ளத்தில் மூழ்கிய வீடு.. கூரையின் மீது ஏறி உதவி கேட்ட நடிகர் விஷ்ணு விஷால்.
சென்னை வெள்ளத்தில் பல சினிமா நட்சத்திரங்களின் வீடுகளும் தப்பிக்கவில்லை. பல நடிகர்கள் இது பற்றி புகார் கூறி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரில் வசிக்கும் விஷால் வீட்டில் நேற்று தண்ணீர் புகுந்தது பற்றி வீடியோ வெளியிட்டு அரசை விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால் தனது வீடு வெள்ளத்தில் தத்தளிக்கிறது என்று கூறி கூரை மீது நின்று உதவி கேட்டு இருக்கிறார்.
காரபக்கம் பகுதியில் தண்ணீர் கூடிக்கொன்டே போகிறது, நான் உதவி கேட்டிருக்கிறேன். கரெண்ட் இல்லை, Wifi இல்லை, போன் சிக்னல் இல்லை. கூரையின் மீது ஏறினால் தான் கொஞ்சம் சிக்னல் கிடைக்கிறது. என அவர் கூறி இருக்கிறார்.
Water is entering my house and the level is rising badly in karapakkam
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) December 5, 2023
I have called for help
No electricity no wifi
No phone signal
Nothing
Only on terrace at a particular point i get some signal
Lets hope i and so many here get some help❤️
I can feel for people all over chennai… pic.twitter.com/pSHcK2pFNf