
முட்டை வாங்கச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்
வீட்டிற்கு முட்டை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர் கலகெடிஹேன ஹல்கம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக வயங்கெட காவல்துறையினர் தெரிவித்தனர்.
அளுத்கம அனுர மத்தியமஹா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் திலன் மாதவ ரத்னவீர என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
மாணவன் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து கலகெடிஹேன சந்தி நோக்கி பயணித்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.