செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பம்.

செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பம்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 168 சிறார்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாகவும் அரசாங்க நிதி பற்றிய குழு குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அண்மையில் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நாடாளுமன்றில் குழு கூடிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில், பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவசரமான தேவை என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பம் | In September 22 Girls Became Pregnant

ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளை உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்படி, சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் தேவைப்படும் பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.