வெளிநாட்டில் வேலைபுரிந்த யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!

வெளிநாட்டில் வேலைபுரிந்த யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!

டுபாய் - அபுதாபிக்கு வேலைக்கு சென்று, கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்தவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் 2014ஆம் ஆண்டு டுபாய் - அபுதாபிக்கு சென்று அங்கு வேலை செய்து வந்த நிலையில் கடந்த 10.08.2022 அன்று மூன்று மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டில் வேலைபுரிந்த யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி! | Death Of A Person Who Went To Work Abroad Jaffna

இவர் கடந்த 17.11.2023 அன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.