பட்டப்பகலில் ஆயுதமுனையில் வங்கியில் இடம்பெற்ற பாரிய கொள்ளை.
குருநாகல் உயந்தனையில் அமைந்துள்ள கூட்டுறவு கிராமிய வங்கியில் ஆயுதம் ஏந்திய இருவர் இன்று பிற்பகல் பெருமளவு பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தொரட்டியாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைத்துப்பாக்கியை காட்டிக் கொண்டு வந்த இரு கொள்ளையர்கள், வங்கிக் கிளையில் பணிபுரியும் இரு அதிகாரிகளையும் அச்சுறுத்தி கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்ற விபரம் வெளியாகவில்லை.
உயந்தனை எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் அமைந்துள்ள வங்கியில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருநாகல் பகுதியில் இவ்வாறானதொரு பொதுக் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றது இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.