யாழில் தென்னிலங்கையைச் சேர்ந்த நபரொருவர் அதிரடி கைது!

யாழில் தென்னிலங்கையைச் சேர்ந்த நபரொருவர் அதிரடி கைது!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் இறைச்சிக்காக பசு மாடுகளை வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (23-11-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழில் தென்னிலங்கையைச் சேர்ந்த நபரொருவர் அதிரடி கைது! | Man Arrested For Smuggling Cows In Jaffna

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மண்டைதீவு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது4 பசு மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.