பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு : இரு யுவதிகள் மரணம்!
பதுளை, ஹாலிஎல உடுவர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதில் 21 வயதுடைய இரு யுவதிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த மண்சரிவில் உயிரிழந்த யுவதிகளின் வீடு முற்றாக சேதமடைந்த நிலையிலேயே, இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தொடரும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடும் மழையுடனான வானிலை காரணமாக இறக்குவானை நகர் மற்றும் நகரை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.