க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2022 பெறுபேறுகள் : வெளியான புதிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2022 பெறுபேறுகள் : வெளியான புதிய அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான  கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

இன்று (21) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

”கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2022 பெறுபேறுகள் : வெளியான புதிய அறிவிப்பு! | Information About The Result Of The O Lexamination

 சித்தியெய்துகின்ற மாணர்வர்களுக்கு நவம்பரில் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

அடுத்த வருடம் 800,000 பாடசாலை சிறார்களுக்கு பாதணிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அடுத்த வருடம் முதல் அனைத்து ஆரம்ப வகுப்புகளுக்கும் மதிய உணவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2022 பெறுபேறுகள் : வெளியான புதிய அறிவிப்பு! | Information About The Result Of The O Lexamination

இதேவேளை பரீட்சைகள் பிற்போடப்பட்டமையால் பிள்ளைகள் வயதாகி வருகின்றனர்.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பரீட்சைக் கொடுப்பனவு தொடர்பில் சாதகமான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டு வருகின்றது.” எனத் தெரிவித்தார்.