இலங்கையில் அரிசி மற்றும் சீனிக்கு தட்டுப்பாடு!!

இலங்கையில் அரிசி மற்றும் சீனிக்கு தட்டுப்பாடு!!

அரிசி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியால் தற்போது சந்தையில் சீனி மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனி மற்றும் அரிசி கொள்வனவு செய்ய முயன்ற வாடிக்கையாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

2020ஆம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்படும் சீனி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கான விசேட சரக்கு வரியை 25 சதத்தில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வரி உயர்வால், பல வியாபாரிகள் சர்க்கரை விலையை உயர்த்தியதால், அதை கட்டுப்படுத்த அதிகபட்ச சில்லரை விலையை அரசாங்கம் விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இலங்கையில் அரிசி மற்றும் சீனிக்கு தட்டுப்பாடு | Shortage Of Rice And Sugar In Sri Lanka

அதாவது ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 275 ரூபாவாகவும், ஒரு கிலோ கருப்பு சீனி 330 ரூபாவாகவும் உள்ளது.

புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகளிடம் தற்போதுள்ள சீனி தட்டுப்பாடு குறித்து கேட்டபோது, ​​தங்களுக்கு சீனி கையிருப்பு விற்பனைக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால், வாடிக்கையாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

சந்தையில் சீனி தட்டுப்பாடு மட்டுமின்றி சம்பா, கீரி சம்பா அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று சந்தைக்கு அரிசி வாங்க வந்த பல வாடிக்கையாளர்கள் அரிசி இல்லாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இலங்கையில் அரிசி மற்றும் சீனிக்கு தட்டுப்பாடு | Shortage Of Rice And Sugar In Sri Lanka

எவ்வாறாயினும், நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் சீனி மற்றும் அரிசி விற்பனை செய்பவர்களை கண்டறியும் சோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.