யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவருக்கு நேர்ந்த கதி

யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவருக்கு நேர்ந்த கதி

யாழில், துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்றையதினம்(26.12.2025) உயிரிழந்துள்ளார்.

மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியை சேர்ந்த அருணாசலம் சத்தியசீலன் (வயது 75) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கனகம் புளியடி வீதியில் இருந்து, புத்தூர் சந்தியூடாக நேற்று(26) மாலை வேளையில், துவிச்சக்கர வண்டியில் கோயிலுக்கு சென்றுள்ளார்.

யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவருக்கு நேர்ந்த கதி | Elderly Man Dies In Motorcycle Accident

இதன்போது, மெய்கண்டான் சந்திக்கு அண்மித்த பகுதியில் பின்னால் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. 

சம்பவ இடத்திலேயே அவர் மயக்கமடைந்த நிலையில்,  நேற்று 5.30 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவருக்கு நேர்ந்த கதி | Elderly Man Dies In Motorcycle Accident

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளர்.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.