யாருங்க நீங்க? யூடியூப் வனிதாவுக்கு அனுப்பிய மெயில்

யாருங்க நீங்க? யூடியூப் வனிதாவுக்கு அனுப்பிய மெயில்

வனிதா, சூர்யாதேவி விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த வனிதா, யூடியூபே குழப்பி போய் நிக்குது என்றும், யாருங்க நீங்க? என்று கேட்டு யூடியூப் தனக்கு மெயில் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

யூடியூபில் எங்கே பார்த்தாலும் என்னுடைய முகம் தான் இருக்கிறது. என்னுடைய முகம் இல்லாத தம்நெய்லே இல்லை. இதனால் யூடியூபே குழம்பிப்போய் ’யாருங்க நீங்க’ என்று எனக்கு மெயில் போட்டு இருக்காங்க. நானும் ஒரு யூடியூப் சேனல் ஓனர் தான். என்னுடைய சேனலுக்கு 6 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளார்கள்கள்

என்னுடைய செய்தி பரபரப்பாக வெளிவந்து கொண்டிருப்பதால் ‘நீங்கள் யார் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் பெரிய பவர்ஃபுல் நபராக இருப்பீர்களோ? நீங்கள் யாரென்று யூடியூபே என்னிடம் கேட்டுள்ளார்கள். இதை பார்த்து நான் பெருமைப்படுவதா? சிரிப்பதா? அழுவதா? என்பது எனக்கு தெரியவில்லை

ஆனால் ஒன்று சட்டப்படி இவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்காமல் விடமாட்டேன். சூர்யாதேவிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் மன்னிப்பு கேட்டால் விட்டுவிடலாம் என்று தான் உண்மையிலேயே நினைத்தேன். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்பது மட்டுமின்றி அதையும் கிண்டல் செய்து வீடியோ போட்டுள்ளார். எனவே சட்டத்திற்கு அவர் பதில் சொல்லியே தீரவேண்டும் என்று வனிதா கூறியுள்ளார்.