'பிக்பாஸ் 3' நடிகை தற்கொலை முயற்சியா? முகநூல் பதிவால் பரபரப்பு

'பிக்பாஸ் 3' நடிகை தற்கொலை முயற்சியா? முகநூல் பதிவால் பரபரப்பு

நான் மிகவும் மன சோர்வாக இருக்கிறேன். அதனால் இந்த உலகத்தை விட்டே போகப் போகிறேன்’ என ’பிக்பாஸ் 3’ நடிகை ஒருவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கன்னட ’பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கன்னட நடிகை ஜெயஸ்ரீ. இவர் பல கன்னட திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது முகநூல் பதிவில் ’நான் மிகவும் மன சோர்வாக உள்ளேன். எனவே இந்த உலகத்தில் இருந்து விடை பெறுகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்

இந்த பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலைக்கு முயற்சித்தார் என்ற தகவல் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சில மணி நேரங்களில் மீண்டும் அவர் தனது முகநூலில் ‘நான் மிகவும் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளேன். நான் அனைவரையும் நேசிக்கிறேன்’ என்று கூறியிருந்தார். இதனால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். அதுமட்டுமின்றி நடிகை ஜெயஸ்ரீ தனது முந்தைய முகநூல் பதிவையும் நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து விசாரணை செய்த போது ஜெயஸ்ரீக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தனது முகநூலில் சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது