காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு.

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு.

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் வடக்கு மாகாணத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு | A Statement On Climate Change

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.