யாழ். பிரபல கல்லூரி அதிபரின் வீட்டுக்குள் கை வரிசையை காட்டிய திருடர்கள்

யாழ். பிரபல கல்லூரி அதிபரின் வீட்டுக்குள் கை வரிசையை காட்டிய திருடர்கள்

நல்லூர் - சங்கிலியன் வீதியில் வசிக்கும் பிரபல கல்லூரி ஒன்றின் அதிபரின் வீட்டை உடைத்து உட்புகுந்த திருடர்களால் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.

மன்னாரை பூர்வீகமாக்கொண்ட குறித்த அதிபர் கடந்த புதன் கிழமை மன்னார் சென்று சனிக்கிழமை மாலையில் வீடு திரும்பிய நிலையில் வீடு உடைத்து களவாடப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

இதன்போது வீட்டில் இருந்த தோடு , மோதிரம் , பென்ரன் உள்ளிட்ட தங்க நகைகளும் , கைத் தொலைபேசி என்பனவும் களவாடப்பட்டுள்ளது. குறித்த களவு தொடர்பில் சனிக்கிழமை மாலையில் குறித்த அதிபரால் யாழ்ப்பாணம் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டினையடுத்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் அதிபரின் இல்லத்தில் தடயங்களைப் பெற்றதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.-