முன்பள்ளி ஆசிரியையை மிரட்டிய கிராம உத்தியோகத்தர் கைது: வெளியான பின்னணி.

முன்பள்ளி ஆசிரியையை மிரட்டிய கிராம உத்தியோகத்தர் கைது: வெளியான பின்னணி.

ஹோமாகமவில் உள்ள முன்பள்ளி ஆசிரியர் ஒருவரிடமிருந்து 2 மில்லியன் கப்பம் பெற வந்த கிராம உத்தியோகத்தரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஹோமாகம, பிடிபன தெற்கு சுவபுதுகம கிராம சேவையாளர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் என காவல்துறையினர் தெரிவித்ததுள்ளனர்.

ஹோமாகமவில் உள்ள முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் 2 மில்லியன் கோரி குறித்த நபர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சந்தேக நபர் கப்பம் பெற சென்றவேளை காவல்துறை புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்பள்ளி ஆசிரியையை மிரட்டிய கிராம உத்தியோகத்தர் கைது: வெளியான பின்னணி | Grama Niladhari Arrested While Taking Ransom

கப்பம் பெறுவதற்காக சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கிராம சேவையாளர் அடையாள அட்டை என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.