யாழில் பெண்ணொருவர் தனித்து வசித்து வந்த வீடொன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழில் பெண்ணொருவர் தனித்து வசித்து வந்த வீடொன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகை நகை திருட்டு போயுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் காலை (07-11-2023) வழக்கம்பரை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழில் பெண்ணொருவர் தனித்து வசித்து வந்த வீடொன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Jewelery Was Stolen From A House In Vaddukoddai

குறித்த வீட்டில் வயோதிபப் பெண்ணொருவர் தனித்து வசித்து வந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா அவர்களை தொடர்புகொண்டு கேட்டவேளை, அப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழில் பெண்ணொருவர் தனித்து வசித்து வந்த வீடொன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Jewelery Was Stolen From A House In Vaddukoddaiமேலும், எத்தனை பவுண் நகை திருட்டு போயுள்ளது என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என வினவியபோது, தற்போது தான் விசாரணை இடம்பெறுகிறது. விசாரணை முடிந்த பின்னர் எத்தனை பவுண் என கூற முடியும் என கூறினார்.

இதேவேளை, முறைப்பாடு பதிவு செய்யும் போது எத்தனை பவுண் களவாடப்பட்டுள்ளது என்று முறைப்பாட்டாளர் கூறியிருப்பார் தானே என்று கேட்டவேளை, முறைப்பாட்டாளருக்கும் சரியாக தெரியவில்லை, அவர் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வந்து கூறுவதாக கூறியதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.