இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு: புத்தளத்தில் சோக சம்பவம்!

இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு: புத்தளத்தில் சோக சம்பவம்!

மதுரங்குளி - புழுதிவயல் பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்றைய தினம் (07-11-2023) நண்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு: புத்தளத்தில் சோக சம்பவம்! | Young Woman Died Due To Electric Shock In Puttalamகுறித்த சம்பவத்தில், பாலாவி - புழுதிவயல், ரெட்பானா பகுதியைச் சேர்ந்த 38 வயதான குப்பை மரிக்கார் பாத்திமா சாபிகீன் எனும் ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் மின்சார தேவைக்காக மின் வயரை எடுத்து கையாளுகையிலேயே இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு: புத்தளத்தில் சோக சம்பவம்! | Young Woman Died Due To Electric Shock In Puttalamமின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளம் பெண்ணை, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், மரண விசாரணையை நடத்தினார்.

இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு: புத்தளத்தில் சோக சம்பவம்! | Young Woman Died Due To Electric Shock In Puttalam

மேலும், இன்றையதினம் மாலை உயிரிழந்த இளம் பெண்ணின் ச்டலம் மீதான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மின்சாரம் தாக்கியமையால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.