ஹோட்டல் அறைக்குள் கொள்ளை; பெண்ணின் உடையணிந்து தலை தெறிக்க ஓடிய திருடன்
ஹோட்டல் அறைக்குள் புகுந்து 200 அமெரிக்க டொலர்கள், ரூ.96,000 மற்றும் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
ரஷ்ய தம்பதியொருவரின் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே கொள்ளைச்சமபவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் கிட்டத்தட்ட 20 அடி உயரமுள்ள சுவரில் இருந்து குதித்து அறைக்குள் நுழைந்து பணம் மற்றும் சொத்துக்களை திருடியதாக தெரிவிக்கப்படுகிறது,
குறித்த சந்தேக நபர் ரஷ்ய பெண்ணின் ஆடையை அணிந்து கொண்டு சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.