4 வாரங்களுக்கு பின் இன்ஸ்டாகிராமில் விஜய் வெளியிட்ட பதிவு.. என்ன தெரியுமா, இதோ பாருங்க
தளபதி விஜய்யை கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர் நடிப்பில் சமீபத்தில் தான் லியோ படம் வெளிவந்தது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 565 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும் கேரளா UK, France உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. நடிகர் விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.
தனது இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர்.
தனது படங்கள் குறித்து மட்டுமே இதுவரை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடிகர் விஜய் பதிவு செய்து வருகிறார். கடைசியாக லியோ படத்தின் ட்ரைலர் குறித்து நான்கு வாரங்குகளுக்கு முன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது 4 வாரங்களுக்கு பின் லியோ படத்தின் வெற்றி விழாவில் எடுக்கப்பட்ட HD புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..