வெளிநாட்டிலுள்ள பெண் ஒருவர் பேசாமையினால் இலங்கையில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு..!
யக்கலமுல்ல பிரதேசத்தில் வெளிநாட்டில் இருக்கும் பெண் ஒருவர் ஒருவாரமாக தன்னிடம் பேசுவதில்லை எனக்கூறி 40 அடி உயர மாமரத்தில் ஏறி உயிரை மாய்க்க முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
வட்ஸ்அப் மூலம் குறித்த பெண்ணிடம் பேச வைத்து அவரை மரத்திலிருந்து கீழே இறங்க வைத்து காப்பாற்ற பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
குவைத்தில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவருடன் அக்மீமன ஹியாரே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் இரகசிய தொடர்பு வைத்திருந்துள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், சுமார் ஒரு வாரமாக இவருடன் பழகிய பெண் பேசாமல் இருந்துள்ளார்.
இதன் காரணமாக நாகியாதெனிய பிரதேசத்தில் உள்ள தோட்ட வீடுகளுக்கு அருகில் உள்ள நாற்பது அடி மாமரத்தின் கிளையில் கயிற்றை எடுத்து அமர்ந்து தற்கொலை செய்து கொள்வதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
தான் காதலிக்கும் பெண் தன்னிடம் பேசாமல் இருந்தால் வாழ்வதில் அர்த்தமில்லை என்று கூறியுள்ளார்.
இச்சம்பவம் யக்கலமுல்ல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, யக்கலமுல்ல பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சந்தன ஹேவகே சம்பவ இடத்திற்குச் சென்றார்.
நிலைமையை ஆராய்ந்துவிட்டு, வெளிநாட்டில் இருந்தவரை தற்கொலை செய்யப்போகும் நபருடன் தொலைபேசியில் இணைத்து, மரத்தில் இருந்து தரையில் இறக்கி, பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் இந்த நபரின் மனநிலையை பரிசோதிக்க மனநல மருத்துவரிடம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.