உடனடியாக 1500 அரச ஊழியர்களுக்கு நியமனம்: அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு..!
குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் 1500 பேரை உடனடியாக பணிக்கு அமர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நேர்முகத் தேர்வுகளில் சித்தியடைந்து மூன்று வருட காலமாக வேலை வாய்ப்புக்காக எதிர்ப்பார்ப்புடன் பலர் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு காத்திருக்கும் குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் குழு ஒன்று இப்பணி அமர்விற்கு தெரிவு செய்யப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.