நீதிமன்றில் சரணடைந்த பிரபல வர்த்தகர்!

நீதிமன்றில் சரணடைந்த பிரபல வர்த்தகர்!

பெண்ணொருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பிரபல வர்த்தகர் பிரியான் மெனிக் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வர்த்தகரை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்ட உத்தரவை அடுத்தே, அவர் சரணடைந்துள்ளார்.

நீதிமன்றில் சரணடைந்த பிரபல வர்த்தகர்! | A Famous Businessman Who Surrendered In Court2018 ஆம் ஆண்டு காலி முகத்திடலுக்கு அருகில் 43 வயதான பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் முறைப்பாட்டுக்கு அமைய நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பல வருடங்களின் பின்னர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் சட்டமா அதிபரின் கருத்துளுக்கு அமைய குறித்த நபரை கைது செய்யுமாறு நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து வர்த்தகர் நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக முன்னியாகியதுடன் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.