கோல்ட் மெடல் வாங்கிய ஆத்விக் அஜித் குமார்.. வேற லெவலில் வைரலாகும் புகைப்படம்..!
நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் கோல்ட் மெடல் வாங்கி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் - ஷாலினி தம்பதியின் மகன் ஆத்விக் சிறுவயதிலேயே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த போட்டியில் ஆத்விக் அஜித் குமார் மிக அபாரமாக கால்பந்து விளையாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் இந்த போட்டியில் அவருக்கு கோல்ட் மெடல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, எதிர்கால உலக சாம்பியன் உருவாகி வருகிறார் என பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சக கால்பந்து வீரர்களுடன் ஆத்விக் கோல்ட் மெடல் உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி ஸ்தம்பிக்க வைத்து வருகிறது.