விசேட அறிவிப்பு விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்!
நாடு முழுவதும் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு எதிர்வரும் (17.10.2023) ஆம் திகதி முதல் (20.10.2023) ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் தென்மேற்கு பகுதி உட்பட பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.