5 நாடுகளில் இருந்து இலங்கை வர விசா கட்டணமில்லை!

5 நாடுகளில் இருந்து இலங்கை வர விசா கட்டணமில்லை!

 5 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வீசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு வீசா கட்டணம் விலக்களிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

5 நாடுகளில் இருந்து இலங்கை வர விசா கட்டணமில்லை! | No Visa Fee To Come To Sri Lanka From 5 Countriesநாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

5 நாடுகளில் இருந்து இலங்கை வர விசா கட்டணமில்லை! | No Visa Fee To Come To Sri Lanka From 5 Countriesஇதன்படி, இந்த வருடத்தின் கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 938 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.