மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்.

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்.

பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் மனைவியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

49 வயதுடைய அசோக வாசல குமாரி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தகராறு: மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் | Husband Who Brutally Killed His Wife

கணவர் கைது செய்யப்பட்டதுடன், குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.